Montag, 16. Februar 2015

பிலேயாம்



இவர் யார் - இவர் ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசி
ஆனால் இவர் இஸ்ரவேலர் அல்லாதவர்
மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாம் உபாகமம்‬ ‭23‬:‭4‬ 
பேயோரின் குமாரன் பிலேயாம் - இவர் லாபானின் வம்சத்தில் வருகிறார். 
மோவாப் தேசத்தின் ராஜா இஸ்ரவேலை சபிக்க அழைத்தார் ஆனாலும் இவர் கர்த்தரின்
வாக்கின்படி மூன்றுமுறை ஆசீர்வதித்தார். 

அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய். 
எண்ணாகமம்‬ ‭24‬:‭10‬ 

ஆனாலும் இஸ்ரவேலை பாவத்தில்விழத்தள்ள பாலாக்குக்கு ஆலோசனை கொடுத்தான். 

இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். ‭
யூதா‬ ‭1‬:‭11‬

இங்கே பிலேயாம் கூலிக்காக வஞ்சகம் செய்ததை எடுத்துக்காட்டுகிறார் யூதா

செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி, தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம். கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய
மதிகேட்டைத் தடுத்தது. 
2 பேதுரு‬ ‭2‬:‭15-16‬ 

இவன் கடைசியில் கொலை செய்யப்பட்டான் 

அவர்களைக் கொன்றுபோட்டதும் அன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள். 
எண்ணாகமம்‬ ‭31‬:‭8‬

Keine Kommentare:

Kommentar veröffentlichen