Montag, 23. Februar 2015

யாபேஸ்




அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். 

யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். 
அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.

 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; 
அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். 
1 நாளாகமம்‬ ‭4‬:‭9-10‬ 

யாபேஸ் ஜெபம்பன்னுகிறவராக இருந்திருக்கிறார் 
4 காரியத்தைக் கர்த்ரிடம் கேட்கிறார்

1. என்னை ஆசீர்வதியும்
2. என் எல்லைகளை பெரிதாக்கும் 
3. உமது கரம் என்னோடே இருக்கட்டும் 
4. தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்

Freitag, 20. Februar 2015

யார் இந்த அமலேக்கியர்?



ஏசா -  எலீப்பாஸ்  -  அமலேக்கு 
அமலேக்கு ஏசாவின் பேரன் 
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது
அவர்களை வழிமறித்து யுத்தம்பண்ணினார்கள். 

சாமுவேல் - சவுலிற்கு சொன்ன கர்த்தருடைய வார்த்தை;

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். 

அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய் என்றும் ஆண்டவர் 
சொல்லியிருந்தார். 

அப்படியே அவர்கள் அழிக்கப்பட்டனர்.

-------------------------------------
அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள். 
யாத்திராகமம்‬ ‭17‬:‭8

உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம். 
உபாகமம்‬ ‭25‬:‭19‬ 

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். 
1 சாமுவேல்‬ ‭15‬:‭2-3‬ 

Donnerstag, 19. Februar 2015

யார் இந்த மீதியானியர் ?



பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். நியாயாதிபதிகள்‬ ‭6‬:‭1‬

ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான். ஆதியாகமம்‬ ‭25‬:‭1‬

அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்க்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.

ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.
(‭1 நாளாகமம்‬ ‭1‬:‭32‬

மீதியானியர் - கேத்தூராளின் வம்சத்தினர்.

யோசியா ராஜா



யோசியா ராஜாவாகிறபோது 8 வயதாயிருந்து, 31 வருஷம் எருசலேமில் அரசாண்டான். 
அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான். 
அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள், தோப்புகள், சுரூபங்கள், விக்கிரகங்கள் ஆகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும், எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.
அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்.

கண்டெடுக்கப்பட்ட நியாயப்பிரமாண புத்தகம் ராஜா முன் வாசிக்கப்பட்ட போது
நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு அழுதான். 
புத்தகத்தில் எழுதியிருக்கிறவைகளை குறித்து விசாரிக்க 
உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனார்கள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள். 

'இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், 

" இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றாள். 

அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்.
தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை. 

யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் யுத்தம் பண்ணவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டான்.
ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும், அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான். 
அங்கே காயம்பட்டு மரித்துப்போனான். 

எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்.
2 நாளாகமம் 34-35

Mittwoch, 18. Februar 2015

எலியா



1.  கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 
‭1 இராஜாக்கள்‬ ‭17‬:‭1‬ 

2. பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
1 இராஜாக்கள்‬ ‭17‬:‭2

3. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன் என்றார். 
‭1 இராஜாக்கள்‬ ‭17‬:‭8-

4. அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.

கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள். 
‭1 இராஜாக்கள்‬ ‭18‬:‭20, 38-39‬ 
எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்டான் 
1 இராஜாக்கள்‬ ‭19‬:‭1‬ 

5.  எலியா யேசபேலுக்கு பயந்து 
அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான். கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்.
‭1 இராஜாக்கள்‬ ‭19‬:‭4-7‬ 

6.   ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு, 
1 இராஜாக்கள்‬ ‭19‬:‭15-16‬ 

7. அகசியா வியாதிப்பட்டு
நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான். 
2 இராஜாக்கள்‬ ‭1‬:‭2, 4‬ 

8.  எலியாவும் - எலிசாவும்  பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். 
‭2 இராஜாக்கள்‬ ‭2‬:‭11‬

Dienstag, 17. Februar 2015

கேள்வி - பதில்


1. ஆபிரகாம் பிறந்த தேசம் ?                                                 
2. யாக்கோபுக்கு ரெபேக்கா என்ன முறை?                            
3. ஆபிரகாம் கானானுக்கு வரும்போது வயது என்ன?             
4. மோவாப்பியர் யார்?                                                          
5. கானானியர் யார் ?                                                            
6.  லோத்தின் தகப்பன் பெயர்?                                              
7. தாவீதின் சகோதரர் எத்தனை பேர்?                                   
8. இயேசு எருசலேமுக்கு எதிலே வந்தார்?
9. ஆபிரகாம் ஈசாக்கை பலியிடக்கொண்டுபோன மலையின் பெயர் என்ன? 
10. கேத்தூராள் யார்?  

11  பாலாக் எந்த தேசத்தின் ராஜா?                               
12. யார் இந்த மீதியானியர்?                                                   
13. யார் இந்த அமலேக்கியர்?   
14. அம்மோனியர் யார்?       
15. மோசேயின் ஆகமங்களை ஒழுங்குபடுத்துக?
16. பிலேயாமின் முடிவு எப்படி இருந்தது ?
17   யாருடைய கோல் பூப்பூத்து பழங்களைக்கொடுத்தது?                                 
18. ஆபிரகாம் தன் தகப்பன் மரிக்கும் வரை தங்கியிருந்த இடம் எது?
19. எலியேசர் யார்?  
20. ஆபிரகாம் யாருக்கு எல்லாவற்றிலும் தசம்பாகம் கொடுத்தான். 

21. மோசே எந்த கோத்திரத்தார் ? 
22. யாக்கோபின் 4 வது குமாரன் பெயர் என்ன ? 
23. மோசே எகிப்தைவிட்டு ஓடி எந்த தேசத்தில் போய் தங்கினார் ? 
24. யாக்கோபின் குடும்பத்தினர் எத்தனைபேர் எகிப்துக்கு போயிருந்தனர்?
25. இஸ்ரவேலர் எவ்வளவு காலம் எகிப்திலே குடியிருந்தனர்?  
26. ஏன் பஸ்கா கொண்டாடப்பட்டது ? 
27. சாராளின் தகப்பன் பெயர் என்ன?
28. ஆதியாகம்ம் எத்தனை அதிகாரம் கொண்டது?
29. ஆபிரகாம் ஈசாக்கை பலியிடக்கொண்டுபோன மலையின் பெயர் என்ன? 
30. கர்த்தர் மோசேயை நோக்கி: வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன்   என்று  சொன்ன ஜாதியினர் யார்?

31. ஈசோப்புக் கொத்தை எதற்கு பயன்படுத்தினர்.?
32. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை எப்படி அழைப்பர்?
33.  எகிப்திலிருந்து புறப்படும் போது ஆரோனுக்கு என்ன வயது?
34. எகிப்திலிருந்து புறப்பட்டது  எத்தனைபேர் ?   
35. ஆண்டவர் யாரை வெறுத்து யாரை சினேகித்தார்?
36. பத்து வாதைகள் ?
37. நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது?
38. யோசுவா எந்த கோத்திரத்தை சேந்தவர்?   
39 காலேப்  எந்த கோத்திரத்தை சேந்தவர்?  

மெல்கிசேதேக்கு

அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: 

வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். 

இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். 

ஆதியாகமம்‬ ‭14‬:‭18-20‬ 







Montag, 16. Februar 2015

5 மனிதர்கள்

கடைசி நேரத்தில் இயேசுவால் தொடப்பட்ட 5 மனிதர்கள் 
-----------------------------------------
1.  மல்குஸ்.  அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பேர். 
யோவான்‬ ‭18‬:‭10‬ 

2. பரபாஸ்.   அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான். 
யோவான்‬ ‭18‬:‭40‬ 

3.  சீமோன்.  அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
லூக்கா‬ ‭23‬:‭26‬ 

4.  கள்ளன்.     நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,      
லூக்கா‬ ‭23‬:‭41‬ 

5. நூற்றுக்கு அதிபதி.     சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். 
லூக்கா‬ ‭23‬:‭47‬ 

பிலேயாம்



இவர் யார் - இவர் ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசி
ஆனால் இவர் இஸ்ரவேலர் அல்லாதவர்
மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாம் உபாகமம்‬ ‭23‬:‭4‬ 
பேயோரின் குமாரன் பிலேயாம் - இவர் லாபானின் வம்சத்தில் வருகிறார். 
மோவாப் தேசத்தின் ராஜா இஸ்ரவேலை சபிக்க அழைத்தார் ஆனாலும் இவர் கர்த்தரின்
வாக்கின்படி மூன்றுமுறை ஆசீர்வதித்தார். 

அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய். 
எண்ணாகமம்‬ ‭24‬:‭10‬ 

ஆனாலும் இஸ்ரவேலை பாவத்தில்விழத்தள்ள பாலாக்குக்கு ஆலோசனை கொடுத்தான். 

இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். ‭
யூதா‬ ‭1‬:‭11‬

இங்கே பிலேயாம் கூலிக்காக வஞ்சகம் செய்ததை எடுத்துக்காட்டுகிறார் யூதா

செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி, தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம். கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய
மதிகேட்டைத் தடுத்தது. 
2 பேதுரு‬ ‭2‬:‭15-16‬ 

இவன் கடைசியில் கொலை செய்யப்பட்டான் 

அவர்களைக் கொன்றுபோட்டதும் அன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள். 
எண்ணாகமம்‬ ‭31‬:‭8‬