Samstag, 21. März 2015

ஈசாக்


1⃣. பெற்ரோருடைய முதிர்வயதிலே பிறந்தார் ஈசாக்
தாத்தா பாட்டி - பேர்ப்பிள்ளை போல இருந்தனர் 
ஈராக்குக்கு திருமணமாக முன்பே மரித்துப்போனார் தாய் சாராள் 
சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது. ஆதியாகமம்‬ ‭23‬:‭1‬ 
தகப்பனுக்கும் வயது சென்று விட்டது 137 வயது
ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார். ஆதியாகமம்‬ ‭24‬:‭1
மகன் ஈசாக்கிற்கு பெண் பார்க்கிறார் தகப்பன் 
ஆனாலும் தகப்பனும்,
 மணமகனும் பெண் பார்க்கபோகவில்லை 
கர்த்தரே நேராக நடத்துகிறார் 
Norden syriya.  பதான் அராம்  நாகோரின் ஊருக்கு வருகிறார் ஊழியக்காரன் 
அந்தப் பெண் மகா ரூபவதியும்,    ஆதி 24:16 
அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு,    ஆதி 24‬:‭21
இப்படியாக ஈசாக் மகா ரூபவதியும், குணசாலியாண பெண்னை கண்டடைந்தான். 

நீதிமொழிகள் : அதிகாரம் 31 : 10

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
----------------------------------------
2⃣. மலடி
ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; 
ஆதியாகமம்‬ ‭25‬:‭20‬ 
கிட்டத்தட்ட இருபது வருஷம் வாழ்ந்தாகிவிட்டது. 
இப்ப ஈசாக்கிற்கு 59 வயதாச்சு பிள்ளை இல்லை 
மலடியாயிருந்த தன் மனைவிக்காக  கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். 
ஆதியாகமம்‬ ‭25‬:‭21‬ 
கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்
பிள்ளைகள் வளர்ந்தார்கள்   ஒருவன் வேட்டைக்காரன் மற்றவன்   கூடாரவாசி. 
---------------------------------------
3⃣   பஞ்சம் 
ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
ஆதியாகமம்‬ ‭26‬:‭1‬
கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. 
ஆதியாகமம்‬ ‭26‬:‭2‬ 
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; 
ஆதியாகமம்‬ ‭26‬:‭12‬ 
--------------------------------------
4⃣. அவன் பேரில் பொறாமைகொண்டு
அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு, அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள். 
ஏசேக்கு,  சித்னா   தங்களுடைய தண்ணீர் என்று வாக்குவாதம் பண்ணினார்கள். 
ரெகொபோத்,சேபா.      பெயர்செபா
அபிமெலேக்கு ஈசாக்குடன் உடன்படிக்கை பண்ணிக்கொண்டான். 
------------------------------------
5⃣. ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள். ஆதியாகமம்‬ ‭26‬:‭34-35‬ 

யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போன்
ஆதியாகமம்‬ ‭28‬:‭7‬

கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும், ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம் பண்ணினான். 
ஆதியாகமம்‬ ‭28‬:‭8-9‬ 
இஸ்ரவேலின் தகப்பனாய் நல்ல முதிர் வயதிலே மரித்தார். 
---------------
குறிப்புகள் :-  கர்த்தரின் சித்தப்படி திருமணம் 
                     தாய் தகப்பனுக்கு கீழ்படிந்த யாக்கோபின் வாழ்க்கை ஆசீர்வாதமாய். 

Keine Kommentare:

Kommentar veröffentlichen