Samstag, 21. März 2015

ஈசாக்


1⃣. பெற்ரோருடைய முதிர்வயதிலே பிறந்தார் ஈசாக்
தாத்தா பாட்டி - பேர்ப்பிள்ளை போல இருந்தனர் 
ஈராக்குக்கு திருமணமாக முன்பே மரித்துப்போனார் தாய் சாராள் 
சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது. ஆதியாகமம்‬ ‭23‬:‭1‬ 
தகப்பனுக்கும் வயது சென்று விட்டது 137 வயது
ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார். ஆதியாகமம்‬ ‭24‬:‭1
மகன் ஈசாக்கிற்கு பெண் பார்க்கிறார் தகப்பன் 
ஆனாலும் தகப்பனும்,
 மணமகனும் பெண் பார்க்கபோகவில்லை 
கர்த்தரே நேராக நடத்துகிறார் 
Norden syriya.  பதான் அராம்  நாகோரின் ஊருக்கு வருகிறார் ஊழியக்காரன் 
அந்தப் பெண் மகா ரூபவதியும்,    ஆதி 24:16 
அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு,    ஆதி 24‬:‭21
இப்படியாக ஈசாக் மகா ரூபவதியும், குணசாலியாண பெண்னை கண்டடைந்தான். 

நீதிமொழிகள் : அதிகாரம் 31 : 10

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
----------------------------------------
2⃣. மலடி
ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; 
ஆதியாகமம்‬ ‭25‬:‭20‬ 
கிட்டத்தட்ட இருபது வருஷம் வாழ்ந்தாகிவிட்டது. 
இப்ப ஈசாக்கிற்கு 59 வயதாச்சு பிள்ளை இல்லை 
மலடியாயிருந்த தன் மனைவிக்காக  கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். 
ஆதியாகமம்‬ ‭25‬:‭21‬ 
கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்
பிள்ளைகள் வளர்ந்தார்கள்   ஒருவன் வேட்டைக்காரன் மற்றவன்   கூடாரவாசி. 
---------------------------------------
3⃣   பஞ்சம் 
ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
ஆதியாகமம்‬ ‭26‬:‭1‬
கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. 
ஆதியாகமம்‬ ‭26‬:‭2‬ 
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; 
ஆதியாகமம்‬ ‭26‬:‭12‬ 
--------------------------------------
4⃣. அவன் பேரில் பொறாமைகொண்டு
அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு, அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள். 
ஏசேக்கு,  சித்னா   தங்களுடைய தண்ணீர் என்று வாக்குவாதம் பண்ணினார்கள். 
ரெகொபோத்,சேபா.      பெயர்செபா
அபிமெலேக்கு ஈசாக்குடன் உடன்படிக்கை பண்ணிக்கொண்டான். 
------------------------------------
5⃣. ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள். ஆதியாகமம்‬ ‭26‬:‭34-35‬ 

யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போன்
ஆதியாகமம்‬ ‭28‬:‭7‬

கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும், ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம் பண்ணினான். 
ஆதியாகமம்‬ ‭28‬:‭8-9‬ 
இஸ்ரவேலின் தகப்பனாய் நல்ல முதிர் வயதிலே மரித்தார். 
---------------
குறிப்புகள் :-  கர்த்தரின் சித்தப்படி திருமணம் 
                     தாய் தகப்பனுக்கு கீழ்படிந்த யாக்கோபின் வாழ்க்கை ஆசீர்வாதமாய். 

Sonntag, 15. März 2015

எலிசா

எலிசா.  
1⃣.   அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான். ‭
ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். 
2 இராஜாக்கள்‬ ‭6‬:‭9‬ 
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான். 
2 இராஜாக்கள்‬ ‭6‬:‭10‬ 
இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். 
2 இராஜாக்கள்‬ ‭6‬:‭11‬ 
அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான். 
2 இராஜாக்கள்‬ ‭6‬:‭12‬ 
---------
அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். 
மத்தேயு‬ ‭9‬:‭3‬ 
இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? 
மத்தேயு‬ ‭9‬:‭4‬ 
--------
கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார்
--------
இந்த எலிசா யார்?
பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா.          ஒரு தோட்ட காரன்
1 இராஜாக்கள்‬ ‭19‬:‭19‬ 
இது எப்படி அவனால் கூடும்
2⃣.  தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால்    எலிசா இக்கரைப்பட்டான். 
2 இராஜாக்கள்‬ ‭2‬:‭14‬ 
நான் உம்மை விடுகிறதில்லை  அதனால் இந்த முதலாம் அற்புதம். 
----------
  எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான். 
  2 இராஜாக்கள்‬ ‭2‬:‭1‬ 
 கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். 
 கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். 
 கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். 
கில்கால் ----- யோசுவா‬ ‭4‬:‭20‬ 
பெத்தேல் ----- யாக்கோபு அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது. 
ஆதியாகமம்‬ ‭28‬:‭19‬ 
எரிக்கோ ------- ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். 
யோசுவா‬ ‭6‬:‭16‬ 
யோர்தான்.    ----- மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் ஒரு குவியலாகக் குவிந்தது;
யோசுவா‬ ‭3‬:‭16‬
நான் உம்மை விடுகிறதில்லை  அதனால் இந்த முதலாம் அற்புதம்
-------------
3⃣.  எலிசாவன் அற்புதங்கள்.
யோர்தான் நதி இரண்டாக பிளந்தது (2இராஜா.2.13)
எரிகோவின் நீரூற்று சுத்திகரிக்கப்பட்டது. (2இராஜ.2.19)
விதவையின் எண்ணெய் பெருகுகிறது (2இராஜா 4.1).
மரித்த வாலிபன் உயிரோடு எழும்பினான் (2இராஜா. 4.18).
நஞ்சு கலந்த கூழ் சுத்திகரிக்கப்பட்டது (2இராஜா 4.38)
குஷ்டரோகியாகிய நாமான் சொஸ்தமானான் (2இராஜா.5.1)
கேயாசி குஷ்டரோகியானான் (2இராஜா.5.15)
அந்த இரும்பை (கோடாரியை)மிதக்கப்பண்ணி, 2 இரா 6:6
சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு ஆலோசனைபண்ணினான்.‭2 இரா 6‬:‭8

இது எப்படி ????
அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான். 
1 இராஜாக்கள்‬ ‭19‬:‭21‬ 

4⃣. நான்கு தேசங்கள் மேல், இஸ்ரவேல், யூதேயா, மோவாப், ஆராம் (சீரியா) ஆகிய தேசங்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தினவன்.
மற்றவர்களின் செலவில் தன் சுய காரியங்களைத் சாதித்தவனுமல்ல தன்னை ஐஸ்வரியவனாக்கிக்கொன்டவனுமல்ல மற்றவர்களுக்கு உதவி
செய்திருக்கிறார்.  
90 வயதில் வீட்டில் மரித்திருக்கிறார்
57 வருஷம் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார் 

5⃣. எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; 
மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான். 
2 இராஜாக்கள்‬ ‭13‬:‭20-21‬ 

எளிமையான எலிசா. 
நாகமணியின் காணிக்கை கூட வாங்கவில்லை **

Montag, 2. März 2015

கேள்வி. பதில். ( 2 )

1.  தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்;    யார்?
2.  மோசேக்கு எதிர்த்து நின்ற நபர்கள் யார் யார் ? 
3. பிலேயாம் குறித்து எந்த புத்தகத்தில் வாசிக்கலாம் ! 
4  இஸ்ரவேலை சபிக்க பிலேயாமை அழைப்பித்த ராஜா யார்?   
5. தேவனுடைய பெட்டி மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் வீட்டையும் அவனுக்கு     உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்?  

1.  ‭2 நாளாகமம்‬ ‭7‬:‭14‬   வசனம் என்ன சொல்கிறது.?

2. தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே. பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும், என்று கூப்பிட்டது யார் ?

3.  8 வயதில் ராஜாவான அந்த ராஜாவின் பெயர் என்ன?  

4.  அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; மாடுகள் இடறினபடியினால்,பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான் அது யார் ?

5. சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.

நீ தாவீதினிடத்தில் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்?