Sonntag, 17. Mai 2015

யோபு

யோபு

10 பிள்ளைகள்
70000ஆடுகளும், 
3000ஒட்டகங்களும்,
500 ஏர்மாடுகளும்,
500 கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். 
யோபு‬ ‭1‬:‭3‬ 

பெரிய செல்வந்தர் இவர்

என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும். 
யோபு‬ ‭29‬:‭6‬ 

அது மட்டுமில்லாமல்
அவர் முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன். 
நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது. 
நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன். 
யோபு‬ ‭29‬:‭12-15‬

மதிப்புக்கும்,மரியாதைக்கும்,கனத்துக்குமுரியவர்

வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள். பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும். யோபு‬ ‭29‬:‭8-10‬ 

கர்த்தர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைத்திருந்தார். 
அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்திருந்தார் 
அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. 
யோபு‬ ‭1‬:‭10‬ 

ஏனென்றால் 

இந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். 
யோபு‬ ‭1‬:‭1‬ 

Keine Kommentare:

Kommentar veröffentlichen