Freitag, 20. November 2015

கடவுள் பாத்துப்பார்

ஒரு பொண்ணு லவ் பண்ணின, வீட்ல எதிர்ப்பு. அப்புறம் சமாதானமாகி பாக்கணும்னாங்க. பையன வீட்டுக்கு கூட்டி வந்தா.பொண்ணோட அப்பாவும் அவனும் பேச ஆரம்பிச்சாங்க.
என்னப்பா உன் எதிர்காலத் திட்டம் என்ன?ன்னாரு.
பையன் யோசிக்காம, அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்னான்.

சரிப்பா காலேஜ் முடிச்சதும் என்ன பண்ணலாம்னு இருக்க?
அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்
கல்யாணம் பண்ணினா குடும்பம் நடத்த, குழந்த குட்டி பணத்துக்கு?
அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்

பொண்ணு வந்து கேட்டா, பையன் எப்படிப்பா?

ஓ தங்கமான பையன், என்னை கடவுளா நினைக்கிறான்

Donnerstag, 19. November 2015


கெட்டிக்காரன் பொய் எல்லோரிடமும் பலிக்குமா?

காலை வேளையில் ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த சேவல் உற்சாகமாய்ப் பல முறை கூவியபடி இருந்தது.

இதைக் கேட்ட ஒரு நரி அங்கே வந்தது. 

அந்த வேளையில் நரிக்குப் பசியும் அதிகமாக இருந்தது. அந்தச் சேவலைப் பிடித்துச் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டது. ஆனால் அந்தச் சேவல் மரத்தின் மீது இருந்ததால் அதைப் பிடிக்க முடியவில்லை. நரி சேவலைப் பிடிப்பதற்காகத் தந்திரம் ஒன்றைச் செய்தது. 

நரி சேவலைப் பார்த்து, “சகோதரனே! பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் நேற்று ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நீ கேள்விப்பட்டாயா? இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்து கொள்ள வேண்டும், தங்களுக்கிடையே சகோதர மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. நீ கீழே இறங்கி வந்தால் நாமிருவரும் இந்த நல்ல செய்தியைப் பற்றிப் பேசலாம்” என்றது.

நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. இருப்பினும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. தொலைவில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது. 

இதைக் கண்ட நரி, “என்ன சேவலே, மிகவும் அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே... அங்கே என்ன இருக்கிறது?” என்று கேட்டது. 

அதற்குச் சேவல், “அங்கே சில வேட்டை நாய்கள் வருவது போல் தெரிகிறது. அவைகளெல்லாம் வேட்டை நாய்கள் தானா? என்பதைக் கவனித்தேன்” என்றது.

அதைக்கேட்டதும், அந்த நரிக்கு அச்சத்தில் உடல் நடுங்கிப் போய் விட்டது. அது வேகவேகமாக, “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது. 

சேவல், “நரி நண்பரே, நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். நான் இப்போதே கீழே வருகிறேன். வேட்டை நாய்களைக் கண்டு ஏன் இப்போது பயப்படுகிறாய்? சிறிது நேரத்துக்கு முன்பு தானே நம் அனைவருக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னாய். அப்புறம் ஏன் அச்சப்படுகிறாய்?” என்று கேட்டது. அதைக் கேட்ட நரி, “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி பலர் இன்னும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு இந்த ஒப்பந்தம் தெரியாமல் இருந்தால், என் நிலமை என்ன ஆவது? நான் போகிறேன்” என்றபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. 



அதன் ஓட்டத்தைக் கண்ட சேவல் “நரியே, நீ யாரை ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்காரப் பொய்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது” என்று கூறி சிரித்தது.

கெட்டிக்காரன் என்ன பொய் சொன்னாலும், அது புத்திச்சாலியிடம் வெளிப்பட்டு விடும்.

Samstag, 14. November 2015

திட்டம் முக்கியம்
ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார். அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க. 1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சி உடம்பு சரியில்லாம இறுந்துடுவாங்க.
ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க. அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில் விட்டுடுங்கன்னு சொன்னாரு.
போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருகிங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான்தான் அங்க ராஜா.

கடைசி வீடு

குட்டி கதைஒரு ஊரில் ஒரு தனவந்தர் இருந்தார். அவர் காலி மனைகளை வாங்கி அவற்றில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். தன் தொழிலுக்கு உதவியாக ஒரு கொத்தனாரை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அந்தக் கொத்தனார் மிகவும் நேர்த்தியான, அழகான வீடுகளைக் கட்டுவதில் திறமைசாலி. அவர் கட்டும் வீடுகள் உடனே நல்ல விலைக்குப் போயின. பலரும் காத்திருந்து வாங்கினார்கள்.
வியாபாரம் கொழித்தது. தனவந்தரும் கொத்தனாரை நல்ல சம்பளம் கொடுத்து சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். கொத்தனாருக்கு வயது நிரம்பவும், தான் ஓய்வு பெற்றால் நல்லது என்று நினைத்தார். தனவந்தரிடம் அந்த யோசனையைச் சொன்ன போது அவருக்கும் அது சரியென்றே பட்டது. ஆனாலும் அவர் கொத்தனாரைப் பார்த்து 'தம்பி, நீ எவ்வளவோ செய்து விட்டாய். உனக்கு வாழ்க்கையில் ஓய்வு தேவைதான். எனக்காக இறுதியாக ஒரு வீடு கட்டிக் கொடுத்து விட்டுப் போ" என்று கேட்டுக் கொண்டார்.
கொத்தனாருக்கு தனவந்தர் மேலும் வேலை சொன்னது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஓய்வு கேட்டால் வேலை சொல்கிறாரே என்று கோபப் பட்டார். ஆனாலும் பல நாளாக தன்னைப் பார்த்துக் கொண்ட மனிதரிடம் கொண்ட நன்றியறிதலால் ஒன்றும் பேசவில்லை.
வேண்டா வெறுப்பாக அந்தக் கடைசி வீட்டைக் கட்டினார். வழக்கமாக இருக்கும் தரம் அதில் இல்லை. காமா சோமாவென்று இருந்தது.
கட்டி முடித்த அன்று தனவந்தர் வந்தார். வீட்டின் சாவியைக் கொத்தனாரிடம் ஒப்படைத்து, "அப்பா, இந்த வீட்டையே உனக்காகத்தான் கட்டினேன். உன் ஓய்வு காலத்திற்கு இது உதவும். வைத்துக் கொள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
கொத்தனாருக்குத் திடுக்கென்று இருந்தது. நமக்கு என்று தெரிந்திருந்தால் இன்னமும் கவனம் எடுத்து சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று வெகுநேரம் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.
நாமும் நமது இளம் வயதில் நம் யோசனைத் தெரிவுகளாலும் செய்கைத் தெரிவுகளாலும் நமது எதிர்காலம் என்ற வீட்டைக் கட்டுகிறோம். அதில்தான் வாழப் போகிறோம் என்று யோசித்துச் செய்பவர்கள் எப்போதுமே சிறப்பாக வாழ்கிறார்கள்.

Seite 2 von 2

எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!"

குட்டி கதைஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "இவர்களைப் பாரேன்! அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் இவர்களுக்கு பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை" என்று ஏளனம் செய்தனர். 
இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர். 

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான். 

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலி பேசாது என்று தந்தை கூறினார். 

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான். 

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர். 

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

Freitag, 13. November 2015

==========
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.
""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''.
மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார்.
உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
அதை விட்டுவிடுங்கள்'' என்றான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு'' என்றார்.
கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை
--------------------------------------------------
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.
வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.
இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக,
ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி,
‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,
‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைதது;க் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
”The world is like a mirror”, it gives back to anyone the reflection of the thoughts

Mittwoch, 11. November 2015

ஒரு முதியவர் ஒரு.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..!
வெயிலில் வந்த களைப்பு.. அவர் முகத்தில் தெரிந்தது..! அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை.. அழைத்து கேட்டார்..! " தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை..! என்று..!
அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்..!
பெரியவர் தனது சட்டை பைக்குள்.. கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."?
சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க..
இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்றான்..!
பெரியவர் சொன்னார்.. "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்..
வெளியே வெயில் வேறு..அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்..! என்றார்..!
சர்வர்.. சரி..சரி எவ்வோ பணம் குறைவா வச்சுயிருக்க..! என்று கேட்டான்..!
பெரியவர் என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது..! என்றார்..!
சர்வர் சரி..தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..? என்றான்..!
பெரியவர் 'சரி' என சம்மதித்தார்..!
சாப்பாடு கொடுத்தான்..! பெரியவர் சாப்பிட்டு விட்டு அந்த சர்வரிடம்
50 ரூபாய் கொடுத்தார்..!
சர்வர் மேலும் கோபம் ஆனான்..
"யோவ் இந்தாதானேயா 50 ரூபாய் வச்சுயிருக்க..! 45 ரூபாய் தான் இருக்கு'னு சொன்ன..? ஓ.. வெற்றிலை.. பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய் தேவைப்படுதா..? இந்தா..மீதி 5 ரூபாய்..! என்று மீதியை கொடுத்தான்..!
பெரியவர் சொன்னார்.. வேண்டாம் தம்பி அது உனக்குத் தான்..! உனக்கு கொடுக்க என்னிடம் வேறு பணம் இல்லை..! என்று சொல்லிவிட்டு வெயிலில் நடந்து சென்றார்..!
சர்வருக்கு கண்களில் நீர்.. ததும்பியது..!
அன்பு நண்பர்களே ..
யாரேனும் எந்த சூழ்நிலைகளில் எப்படி இருப்பார்கள்..என்று நமக்கு தெரியாது..! யாரையும் ஏளனமாக பார்ப்பதும்..பேசுவதும் தவறு..!!

Montag, 9. November 2015

யார் உண்மையான ஏழை...?

ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன? என்று சொல்லிக் கொடுக்கக் கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

இரு தினங்கள் அங்கு தங்கியிருந்து விட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பியதும் ஏழை எப்படி வாழ்கிறான்? எனக் கேட்டான்.

மகன் சொன்னான்;

“அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது, கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஒன்றிரண்டு விளக்குகள் வைத்துள்ளோம், அந்தக் கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகின்றன. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிதாக இருக்கிறது, அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்கிறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலைப் பருகிறோம், அவர்கள் உடனடியாகப் பாலைக் கறந்து சாபிடுகிறார்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம், அவர்கள் செடியில் இருந்து பறித்துப் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள். நாம் வீட்டைச் சுற்றிச் சுவர் கட்டிப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது...” என்று

மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது...