Mittwoch, 8. April 2015

அடோல்ப் ஹிட்லர்

ஒஸ்ரியாவில் 20-04-1889 ல் பிறந்து,  ஜெர்மனியில் அரசியல் ஆட்சிபுரிந்து, உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர நினைத்த ஜெர்மனிய அதிபர் ‘அடோல்ப் ஹிட்லர்’ பற்றி அரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். 
ஆரம்பகாலத்தில் ஒர் தொண்டனாக செயற்பட்டு அதன் பின்னர் ஜேர்மனியின் இரானுவத்தில் இணைந்து கொண்ட ஹிட்லரின் கனவு 90 வீதம் நனவாகி இருந்தன. ஹிட்லரின் உச்சகட்ட காலமாக 1933-1945 காலப்பகுதிகளைக் குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 


1919ல் நிறைவடைந்த முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படுதோல்வி அடைந்திருந்தது.  இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி வீழ்ச்சி கண்டு கொண்டிருந்தது. நாட்டின் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது பேச்சாற்றலால் அரசியலில் குதித்து, ஜேர்மனிய மக்களை தன்வசப்படுத்தி தன் கனவுக்கு வித்திட்டார். ஒரு தபால் முத்திரையை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கொடுக்கும் பணத்தை விட, பல மடங்கு  அவற்றை அச்சிடுவதற்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்திருந்த காலம். விவசாயம், கால்நடை எல்லாமே அழிந்து இரத்தக்கறை படிந்த ஜெர்மன் பூமியை மீட்டெடுத்து பசுமை புரட்சியால் வளப்படுத்தி மக்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஆரம்ப காலத்தில் தன் ஆட்சியால் செய்து வந்தார். 


என்றுமே அமெரிக்காவுக்குக் தலைசாய்த்துச் செல்லும் ஏனைய உலக நாடுகளுக்கு மாறாக தனது தலையை உயர்த்தி, ஜேர்மனியின் செல்வாக்கை உலகின் பக்கம் திரும்பச் செய்தார். தனது ‘நாசி’ படையணியை உருவாக்கி உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் யூதர்களை இந்நாட்டில் இருந்து பூரணமாக அழித்துவிடும்படி கட்டளையிட்டார். யூதர்களால்தான் முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படு தோல்வியடைந்தது என்றும் யூதர்களின் பரம்பறையும் செல்வாக்கும் இந்நாட்டில் இராணுவ ஆட்சிக்கு தடைகளாக இருப்பதாலும் இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 


மிகவும் படித்து அறிவுகூர்மையான மக்களாகவும்,  யூதப் பெண்கள் அழகிய தோற்றமுடையவர்களாக இருந்ததனாலும் யூதர்கள் பலிவாங்கப்பட்டனர். 1933 தொடக்கம் 1945 காலப்பகுதிவரைக்கும் சுமார் 60 00000 யூதர்கள் படு கொலை செய்யப்பட்டிருந்தனர். யூதர்களைக் கொள்வதற்காகவே பல வகையான தண்டனை முறைகளையும், சிறைச்சாலைகiளும் நாசி படையணினர் அறிமுகப்படுத்தி இருந்தனர்.